நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் அமிர்தவல்லி
வயது 7318 மார்ச், 1946 – 14 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, திருவையாறு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, திருவையாறு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் அமிர்தவல்லி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் சிவபதப் பேறு குறித்து அந்தியேட்டி கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று கீரிமலை தீர்த்தக்கரையில் காலை 07:00 மணியளவில் இடம்பெறும்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் 18/MAR/1946 ஆம் ஆண்டில் திரு.திருமதி அமரசிங்கம் அமராவதி தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக அமிர்தவல்லி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சண்முகநாதன், முத்துலிங்கம், தங்கநாச்சி, சந்திரலிங்கம், ஜெயச்செல்வம், கனகாம்பிகை, சத்தியலிங்கம், சிவலிங்கம் போன்ற சகோதரங்களுடன் குறும்பு செய்து வளர்ந்து பெரியவராகியதும்,திரு திருமதி தம்பிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகன் பத்மநாதன் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக புண்ணியமூர்த்தி, கருணாமூர்த்தி, கணேசமூர்த்தி, விஜயரோகினி, சிறிமூர்த்தி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு பிள்ளைகள் பெரியவர்களானதும் ஜெயக்குமாரி, துஷாந்தினி, கௌரி, ராதாகிருஷ்ணன், சுமலதா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கவினா, கலேஸ், கீர்த்தன், ஹரிஸன், ஜதுஸன், அபிஷா, ரேனுஷா, பவித்திரா, டானியா, சஞ்சிவ், நிலானி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் கிளிநொச்சியில் உள்ள வட்டக்கச்சியிலும்,திருவையாற்றிலும் மகிழ்வாக வாழ்ந்த இவர் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.11.2019 இல் 73 வயதில் கனடாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
புங்குடுதீவு முத்தே பங்கமற்ற சொத்தே
அங்கம் வருத்தி எமைக் காத்த
அன்பு உறவே அன்னை மனமே
எங்கே போனீர் எமை விட்டு
இங்கே பிரிந்து தவிக்கிறோம்
எங்கள் மனதில் நிறைந்த உருவே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

