ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்மநாதன் இரத்தினேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பத்மநாதன் இரத்தினேஸ்வரி

வயது 7528 நவம்பர், 1944 – 16 ஜனவரி, 2020

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
இந்தியா, ஜெனோவா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, இத்தாலி Genoa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் இரத்தினேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாயன்பிற் கீடாக தரணியிலே ஏதுமுண்டோ
தாயென்றொன்றில்லாமல் தரணியில் வாழ்வுமுண்டோ
இனிதாய் எமை வளர்த்த தாய்
பெரிதாய் எமை வாழ்வித்த தாய்
அரிதாய் எமக்கு கிடத்த அன்புத் தாய்
உளதாய் இலதாய் எம்முள் வாழும் தாய்

தாயே நீ சென்று ஓராண்டு ஆனாலும்
என்றும் எம் நெஞ்சில் நீங்காத நினைவாக
பார்க்கும் இடமெல்லாம் உன் உருவம் தெரிகிறதே!
பாவி நெஞ்சம் நேரில் பார்த்திடத் துடிக்கிறதே!
காலன் ஒரு நாள் உனை விடுமுறையில் விடுவானோ ஓடி
வந்து நீ எமக்கு அமுதூட்டி விடுவாயோ...
உன் மடியில் ஓர் நிமிடம் உறங்கத் தருவாயா...?

பாவியெம் மனது பதறித் துடிக்கிறதே!
காலங்கள் சென்றாலும் கலங்கித் தவிக்கின்றோம்
எம் அன்னை ஈசன் பாதக் கமலங்களில்
சரணடைந்து ஆண்டொன்றாகிறது
தெய்வத் திருமகளாய் வான் உலகில் நீர்
இருந்து நித்தமும் வழிகாட்டுமம்மா !

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...

ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 17 ஜனவரி, 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 14 பிப்ரவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.