மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாவதி அருமைநாயகம்
வயது 8818 ஜனவரி, 1931 – 7 மே, 2019
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி அருமைநாயகம் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், ஆதிமயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன் சுப்பிரமணியம், தங்கமுத்துப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், கருகம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற முதலித்தம்பி சங்கரபிள்ளை, பூதாத்தைப்பிள்ளை சங்கரபிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அருமைநாயகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கேதார கெளரி(சிட்னி), அருந்ததி ரமணி(சிட்னி), தயானந்தன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலகன்(சிட்னி), ரெவர் கிறிஸ்டி டேவிட்(சிட்னி), சுசித்ரா(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கருணாவதி, பொன்மயிலைநாதன்(சிட்னி), காலஞ்சென்ற அருணகிரிநாதன், திருப்பரங்கிரிநாதன்(உடுப்பிட்டி), Dr. சிவலோகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), சுசீலாவதி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஷாமிலா, கௌசல்யா, Dr. தர்ஷிகா, நிரோஷா, நிஷேவிதா, வித்யா ஆகியோரின் அருமைப் பாட்டியும்,
சதீஷ், ஶ்ரீசியாமளாங்கன், குஷால் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஷரேயா சச்சின், த்ருவி, நிஷாரா, சமாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,தெங்கு தோட்டம்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் ஆதிமயிலிட்டியில் 18/Jan/1931 ஆம் ஆண்டில் பொன் சுப்பிரமணியம் தங்கமுத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு மூத்த மகளாக பத்மாவதி அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் கருணாவதி, பொன்மயிலைநாதன், அருணகிரிநாதன், திருப்பரங்கிரிநாதன், Dr.சிவலோகநாதன், சுசீலாவதி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கருகம்பனைச் சேர்ந்த முதலித்தம்பி சங்கரப்பிள்ளை பூதாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அழகிய ஆண் மகனான அருமைநாயகம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கேதாரகௌரி, அருந்ததிரமணி, தயானந்தன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது குடும்பத்தில் அன்பு கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.05.2019 இல் 88 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மயிலிட்டி தந்த
......மாண்பு உள்ளமே
மனதில் அன்பு
......மங்காத உறவே
புன்னகை முகமே
....பூவிழிப் பார்வையே
அழியா நினைவுடன்
......மனதில் நிலைத்தீர்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

