மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாவதி தம்பு
வயது 1018 செப்டம்பர், 1917 – 7 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி தம்பு அவர்கள் 07-06-2019 வெள்ளிக்கிழமை அன்று தனது 101வது வயதில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற தம்பு மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, விநாயகமூர்த்தி, குணவதி, நீலாம்பிகை மற்றும் ஏகாம்பிகை, காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகசுந்தரா, சிவநாதன், விவேகசுந்தரா, சத்தியநாதன், அம்பிகா, கருணாகரன், சுபாஷ்கரன், ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகராஜா, ரோகினி, காலஞ்சென்ற கிருஷ்ணதாஸ், தனலக்ஷ்மி, யோகநாதன், ஜனனி, பாலலக்ஷ்மி, ரமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாளன்- சுபோதினி, சந்திரிக்கா- வசந்தன், குணாளன்- சுபாஜினி, காருண்யா- ரஞ்சித், வித்யா- கஜன், கஜன்- ராஜி, காயத்திரி- சுகுமார், அபிமன்யு- திரிசூலா, ஜெய்மகிரண், பரதன், லவன், அரிகரன்- ஜெயந்தி, அனந்தினி- மயூரன், தர்மினி, கபிலா, சிந்துஜா, அனுஷா, பைரன், டிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆதர்ஷ், அபிலாஷ், அக்ஷயா, விஸ்வா, சுவேதா, அட்விகா, அம்ரிதேஷ், கவிஷ், கைரா, சாய்ரன், சரண், டியா, ரோஹன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக 10-06-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 முதல் பி.ப 03:00 வரை Bunurong Memorial Park, 790 Frankston, Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia எனும் முகவரியில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ள நான்கு பக்கமும் கடலலை தாலாட்டும் அழகிய வளம் நிறைந்த தீவாக அமையப் பெற்ற ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கில் திரு.திருமதி பொன்னையா பொன்னு தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக பத்மாவதி அவர்கள் 17/SEP/1917 ஆம் ஆண்டில் நாகம்மா, விநாயகமூர்த்தி, குணவதி, நீலாம்பிகை, ஏகாம்பிகை, கமலாம்பிகை போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் அறிவு நிறைந்த ஆண் மகனான தம்பு மயில்வாகனம் அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து யோகசுந்தரா, சிவநாதன், விவேகசுந்தரா, சத்தியநாதன், அம்பிகா, கருணாகரன், சுபாஷ்கரன், ஆனந்தி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து உயர்நிலை அடைந்ததும் தியாகராஜா, ரோகினி, கிருஷ்ணதாஸ், தனலக்ஷ்மி, யோகநாதன், ஐனனி, பாலலக்ஷ்மி, ரமேஷ் போன்றவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.06.2019 இல் 101 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"கரம்பொன் தந்த
......கால விருட்சம்
நிரம்பி வழியும்
.......நிறைந்த அன்பு
வரம்பின்றி பாதுகாத்த
......வாழ்க்கை நிழல்
பரம்பி வளர்ந்து
......பாறி வீழ்ந்ததே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

