மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார்
வயது 8720 ஏப்ரல், 1932 – 28 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி ஸ்ரீஆனந்தகுமார் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபாபதி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஸ்ரீஆனந்தகுமார் துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகெளரி(பிரித்தானியா), ஜெயவாணி(அவுஸ்திரேலியா), ஜெயகாந்தன்(கனடா), ஜெயகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாமினி(கனடா), கமலாதரன்(பிரித்தானியா), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), பாலரட்ணம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோகுலன், கஜன், தனுகுலன், அர்ஜுன், லக்சுமன், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் நல்லூரில் 20/APR/1932 இல் திரு.திருமதி கனகசபாபதி அன்னம்மா தம்பதிகளின் அருமை மகளாய் பத்மாவதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சிவஞானம் எனும் உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி துரையப்பா தம்பதிகளின் அருமை மகனான ஸ்ரீஆனந்தகுமார் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக ஜெயகௌரி, ஜெயவாணி, ஜெயகாந்தன், ஜெயகலா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பாமினி, கமலாதரன், ரவீந்திரன், பாலரட்ணம் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து கோகுலன், கஜன், தனுகுலன், அர்ஜீன், லக்சுமன், ஜனனி, ஜெயராம் பொன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.08.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
""அன்பு அம்மா
.....அனைத்தும் நீங்களே
எமது கல்வியும்
......எமது பண்பும்
எமது வாழ்வும்
....எமது மூச்சும்
அனைத்திலும் உறைந்தீர்
....அசையாது நிலைத்தீர்.""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

