மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவளம்மா அழகரத்தினம்
வயது 929 மே, 1927 – 14 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- இருபாலை, மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளம்மா அழகரத்தினம் அவர்கள் 14-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னம்மா சரவணமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆச்சிமுத்து சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற அழகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
திலகராணி, திலகராஜன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி, கார்த்திகேசு, குமாரசுவாமி, காலஞ்சென்ற புனிதவதி, கமலாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, சற்குணவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், கலாவதி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, சுப்பையா, தங்கம், கந்தையா மற்றும் ஜெயலட்சுமி, காலஞ்சென்ற தாஸ், சந்திரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லையா, அன்னப்பிள்ளை, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஸ்ரீகரி, யூடி, சின்மயன், சிந்தூரன், சிவகாமி, நிசாம்பவி, காருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நியாம், சியா, கேஷவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில், சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 09/MAY/1927 இல் திரு.திருமதி சின்னம்மா சரவணமுத்து தம்பதிகளின் அருமை மகளாய் பவளம்மா அவர்கள் திலகவதி, கார்த்திகேசு, குமாரசுவாமி, புனிதவதி, கமலாவதி, லீலாவதி, சற்குணவதி எனும் உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஆச்சிமுத்து சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு. அழகரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக திலகராணி,திலகராஜன்,கிருஷ்ணவேணி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பரராஜசிங்கம், கலாவதி, பத்மநாதன் போன்றவர்களை திருமணம் முடித்து ஸ்ரீகரி, யூடி, சின்மயன், சிந்தூரன், சிவகாமி, நிசாம்பவி, காருண் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், நியாம், சியா, கேஷவ் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ். இருபாலையில் வாழ்ந்து வந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும்,அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.08.2019 இல் 92 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
அன்புப் பாட்டியே அறிவு உள்ளமே
முன்பு நடந்ததை முழுவதும் உரைக்கும்
தங்கப் பாட்டியே திங்கள் நிலவே
பங்கம் ஏதுமின்றி பாயில் படுத்திருக்கும்
சிங்க மனமே சின்ன உள்ளமே
எங்கே போனீர் எமை விட்டுப் பிரிந்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

