ஆறுதல்

நன்றி நவிலல்

பேதுருப்பிள்ளை டேமியன் அமலதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பேதுருப்பிள்ளை டேமியன் அமலதாஸ்

வயது 5919 அக்டோபர், 1959 – 1 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
இத்தாலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் ஆசிர்வாத அப்பர்கோவிலைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Biella ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேதுருப்பிள்ளை டேமியன் அமலதாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் சமூகவலையத்தளங்கள் ஊடாகவும், துயரத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளை காகிதத்திலும், பதாகைகளிலும் அருளிய பெருந்தகைகளுக்கும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் நாம் குறிப்பிட மறந்து பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தின் அருகில் உள்ள இடமும்,மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான அழகு நிறைந்த நல்லூர் ஆசீர்வாதப்பர் கோவிலடியில் 19/OCT/1959 இல் திரு.திருமதி பேருதுப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.டேமியன் அமலதாஸ் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ஞானப்பிரகாசம்,மேரிபுஸ்பராணி,மரியதாஸ்,விக்டர் விமலதாஸ் எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி மிக்கல்பிள்ளை கிறிஸ்டோபர் இமெல்டா கிறிஸ்டோபர் தம்பதிகளின் அன்பு மகள் இமாக்குலேட்டா(றட்னா) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து றோமேஜன், றினோஜன் எனும் அழகிய பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது, நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.08.2019 இல் 59 வயதில் இத்தாலியில் உள்ள Biella நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

நல்லூர் மண்ணில் நயமுடன் வாழ்ந்து
சில்லென்ற காற்றாய் சிலிப்புடன் மிளிர்ந்து
நில்லென நிமிந்து நடந்து
கல்லாகி போனீரே
சொல்லால் அழைக்க எம்மிடமின்றி

பிற அறிவித்தல்கள்

  1. 4 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.