மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம்
வயது 569 ஏப்ரல், 1963 – 26 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன்வீதி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 26-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பிள்ளைநாயகம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கலையரசி(சுகந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
தனுசிகா, சர்மிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலாதேவி, லோகநாதன், பரிமளாதேவி, பங்கயற்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுந்தரலிங்கம், திலகவதி, சிவலிங்கம், புண்ணியசிங்கம், கமலவேணி, இந்துமதி, நாவரசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Perinpanathan Balasubramaniam was born in Delft, Sri Lanka and lived in Kilinochchi, Vaddakkachchi and In 1992, he moved to Canada and lived in Mississauga with his family. He passed away peacefully on 26th August 2019.
He is Loving Son of Late Balasubramaniyam and Kanmani and Loving Son-in-law of late Pillayinayagam and Parvathipillai.
Beloved Husband of Kalaiarasi(Suhantha).
Loving Father of Thanusiga and Sarmiga.
Beloved Brother of Nirmaladevi, Loganathan, Parimaladevi, Pangaiyatselvi.
Beloved Brother-in-law of Suntharalingam, Thilagavathy, Sivalingam, Puniyasingam, Kamalaveni, Indumathy and Naavarasan.
This notice is provid for all Family and Friends. We request your prayers during this sorrowful time.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு , பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு மேற்கில் 09/APR/1963 இல் திரு.திருமதி பாலசுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.பேரின்பநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நிர்மலாதேவி, லோகநாதன், பரிமளாதேவி, பங்கயற்செல்வி எனும் சகோதர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி பிள்ளைநாயகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் கலையரசி(சுகந்தா) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தனுசிகா, சர்மிகா எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இன்பம் என்று நாதன் என்று அன்பாக அழைக்கப்படும் இவர் வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்து வாழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.08.2019 இல் 56 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்அன்பு
அப்பா அழகு முகமே
புன்செய் வதனம் இப்போது
அனலிட வேக எங்கே போனீர் எமது உயிரே
பாதியில் மறைவீர் எனயாருமே நினைத்ததில்லை
வாசலில் காத்துள்ளோம் வாருமையா ஒருமுறை.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

