ஆறுதல்

மரண அறிவித்தல்

பெரியதம்பி வேலாயுதபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பெரியதம்பி வேலாயுதபிள்ளை

வயது 8118 ஜனவரி, 1938 – 20 ஜூன், 2019

பிறந்த இடம்
இணுவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
உரும்பிராய், Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரமணி(டொரண்டோ), ரமேஸ்(Rocky Montana- மொன்றியல்), ரமணன்(Rocky Montana- மொன்றியல்), ரஜீவன்(டொரண்டோ), கமலினி(டொரண்டோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கேதீஸ்வரன்(ஈசன்), பாமினி, சாந்தினி, சூர்யா, தாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வரட்ணம், ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகினி, விக்னேஸ், ராகவி, திவ்யா, வித்யா, நிருஜா, அஸ்வின், விபுஷா, ஜஸ்னன், அனிஜன், ஹரீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் கோவில்கள் சூழ்ந்த அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், பிரசித்தி பெற்ற கந்தன் அருள்பாலிக்கும் இடமும் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த இணுவில் கிழக்கில் 18/Jan/1938 இல் திரு திருமதி பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மகன் திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வரட்ணம், ராஜரட்ணம், கனகாம்பிகை, யோகேந்திரன், சண்முகரட்ணம் போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரி மகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ரமணி, ரமேஸ், ரமணன், ரஜீவன், கமலினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து கேதீஸ்வரன், பாமினி, சாந்தினி, சூர்யா, தாசன் என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து வாகினி, விக்னேஸ், ராகவி, திவ்யா, வித்யா, நிருஜா, அஸ்வின், விபுஷா, ஜஸ்னன், அனிஜன், ஹரீஸ் போன்ற அழகுப் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.06.2019 இல் 81 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

மனதிற்குள் அழுகிறோம்
மங்காத உங்கள் நினைவில்
பங்கம் நினையா பாசம் நிறைந்த
வரேதங்க குணமும் தயவும்
எங்கும் பரவியுள்ளது

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.