நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பீற்றர் மனுவல்பிள்ளை
வயது 9022 டிசம்பர், 1928 – 8 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் சமூகவலையத்தளங்கள் ஊடாகவும், துயரத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகளை காகிதத்திலும், பதாகைகளிலும் அருளிய பெருந்தகைகளுக்கும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரை வழங்கியவர்களுக்கும், ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் நாம் குறிப்பிட மறந்து பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவன்புடன் நன்றி நவில்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசை யாழ்ப்பாணத்தில் 22/DEC/1928 ஆம் ஆண்டில் திரு.திருமதி மனுவல்பிள்ளை சிசிலியா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.பீற்றர் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் சிறுவயதில் அன்பும் பண்பும் கொண்டு எட்வேட், பூமணி போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரேசம்மா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக ஜெசிந்தா, அசந்தா, உதயன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து புனிதா, சாமிலா என்பவர்கருக்கு திருமணம் முடித்து வைத்து கிறிஸ்ரினா, ஸ்ரிவன், சிந்தியா, ஜெசிக்கா, அன்ரனி எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியது மட்டுமல்லாது கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்த மனம் கொண்டவர்
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.11.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
எம் தந்தையே உம் வாழ்வை உருக்கி
நம் வாழ்வில் ஒளி ஏற்றிய
கருணை உறவே கலங்கா விழியே
விரும்பி வாழ்ந்த விடிவெள்ளியே
கலங்கி அழுகிறோம் தந்தையே
பாசம் இழந்து தவிக்கிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

