1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிள்ளையார் சுப்ரமணியம்
வயது 5410 அக்டோபர், 1964 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Glattbrugg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glattbrugg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிள்ளையார் சுப்ரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று வீற்றிருக்கும்
உங்களை எங்கள் பாசப் பூக்கள் தூவி..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய கண்கொள்ளாக் காட்சி தரும் இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் கோவில்கள் சூழ்ந்த பகுதியுமான நல்லூரில் 10-10-1964 இல் பிள்ளையார் இராசாத்தி தம்பதிகளுக்கு அருமைப் புதல்வனாய் சுப்பிரமணியம் அவர்கள் சறோ, றாஜேஸ், மாலினி ஆகிய உடன் பிறப்புகளுடன் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து உயர் நிலை அடைந்து அழகிய வாலிபனானதும் திரு. திருமதி கதிர்காமு தம்பதிகளின் அழகு மகள் மஞ்சுளா அவர்களை திருமணம் முடித்து இன்பமாகவும் இனிமையாகவும் வாழ்ந்து அபிஸா, அஸ்பனா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாக பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
சுப்பு என நண்பர்களால் பாசமாக அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியாகவும் வாழ்வில் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாகவும் விளங்கியதுடன், நகைச்சுவை ததும்ப நண்பர்களுடன் பேசுவதில் திறமையானவராக திகழ்ந்தார்.
இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-04-2019 இல் 54 வயதில் சுவிஸில் உள்ள Glattbrugg நகரில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"அன்பு அப்பா
கருணை உருவே
அழகிய வதனமே
ஆண்டவன் உள்ளமே
நட்பின் உச்சமே
நன்மை உறவே
உங்களை இழந்து
உள்ளம் வதங்குது "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

