3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிறேம்சுதாகர் விதுஷன்
பொருளியல் கல்லூரி மாணவன்-Lycee Jeanne d'Albret
வயது 1821 ஜூலை, 1998 – 3 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறேம்சுதாகர் விதுஷன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் கனிய காத்திருந்து உன்னை கையில் எடுத்தேனடா - அன்று
பிறப்பிற்கும் இறப்பிற்கும் வெகுதூரம் இல்லையென்று - உன்
மரணம் கூறியதடா - இன்று.
அன்பிற்கு பணிவாய் பண்புக்கு பொருளாய்
நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தாயே.
கண்ணுக்கு கண்ணாய் வளர்ந்த நீ
காற்றில் கரைத்து கனவாகி போனதேனடா ?
உதிரத்திலும் உயிரிலும் கலந்த - உன்
உடன்பிறப்புக்களை தவிக்க விட்டதேனடா ?
எம் வாழ்வில் ஒளி தந்த நீ - நொடிப்பொழுதில்
வானவில்லாய் மறைந்ததேனடா?
வலிசுமந்து நிலைகுலைந்து தனிமையில்
வாடும் எமக்கு இவ்வுலகில் எதுவும்
எந்த உறவும் பெரிதல்லடா மகனே....
நிலையில்லாத இவ்வுலகில் நிஜமாக
வாழ்ந்த வாழ்வு - இன்று
கானல் நீரானதேனடா - விதுவாழ்க்கை
என்னும் பயணத்தை பாதி வழி கடந்துசெல்வதற்குள்
காலக்கொடியவன் கண்வைத்து
உன்னுயிரை வேளை வருமுன்
பறித்து வருடமோ மூன்றாகிவிட்டது
அதன் வலியோ எமக்கு ஆயுள் வரைதொடர்கிறது ...............
ஆண்டவன் பாதத்தில் அமைதியாக துயில் கொள் அன்பு மகனே.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

