ஆறுதல்

மரண அறிவித்தல்

பீதாம்பரம் நித்தியானந்தசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பீதாம்பரம் நித்தியானந்தசிவம்

வயது 8115 நவம்பர், 1937 – 4 ஜூலை, 2019

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
தண்ணீரூற்று, செங்காளன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் நித்தியானந்தசிவம் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரட்ணம், செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிலோசனாவதி(சிலோ- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சரவணபவானந்தசிவம்(ஆனந்தம்), ஞானம்பிகை(ஞானம்- லண்டன்), மகாலிங்கம்(லண்டன்), மனோன்மணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கரட்ணம்(தங்கா- லண்டன்), காலஞ்சென்ற அல்லிராஜா(இலங்கை), பிள்ளைநாயகம்(GS லண்டன்), சரஸ்வதி(ரேஜா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்திமலர்(இலங்கை), துரைசிங்கம்(இலங்கை), பூபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருஞானவதி(இலங்கை) அற்புதவதி(வதி- லண்டன்), சந்திராவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிலா(சசி- சுவிஸ்), வனஜா(தஞ்சி- பிரான்ஸ்), அனுஷா(சுவிஸ்), அஜந்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிராஜ்(ரவி- சுவிஸ்), கணேஸ்வரன்(கணேஸ்- பிரான்ஸ்), சந்திரகுமார்(இந்திரன் – சுவிஸ்), சுவேந்திரன்(ரவி மோகன் – கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

விபுஷா, நிதுஷன், யூலி, யூலியான், யறோம், துவிஷா, தூரிகா, பிறித்திக், சீரா, சர்மிகா, மீனூகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரதீபன், பார்த்தீபன், தர்சினி, பிரேமதர்சினி(வவா), கலைப்பிரியா, கவிப்பிரியா, சீலன், ரூபன், கலா, சிவம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பாஸ்கரன், சுபாஸ்கரன், லேகாசுபாசினி(லேகா), உமா, சக்தி, உமாசக்தி, சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாயில் 15/NOV/1937 ஆம் ஆண்டில் திரு.திருமதி பீதாம்பரம் காமாட்சிதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நித்தியானந்தசிவம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் சரவணபவானந்தசிவம், ஞானம்பிகை, மகாலிங்கம், மனோன்மணி போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் சிலோசனாவதி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சசிலா, வனஜா, அனுஷா, அஜந்தா எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரவிராஜ், கணேஸ்வரன், சந்திரகுமார், சுவேந்திரன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து விபுஷா, நிதுஷன், யூலி, யூலியான், யறோம், துவிஷா, தூரிகா, பிறிந்திக், சிரா, சர்மிகா, மினுகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் போர் காரணமாக இடம்பெயர்ந்து முல்லைத்தீவு தண்ணீரூற்றில் தற்காலிகமாக வசித்ததுடன் அன்புள்ளம் கொண்டவருமான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.07.2019 இல் 81 வயதில் சுவிஸில் உள்ள St.Gallen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சண்டிலிப்பாய் மண்ணின்
சரித்திர வீரனே
வண்டு போல்
சுறுசுறுப்புடன் வாழ்ந்து
பண்புடன் போசி
பாசமழை பொழிந்து
விண்ணில் நிலைத்து
விடிவெள்ளி ஆனீர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.