மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
போல்வின் மேரி தமிழினி
வயது 3224 பிப்ரவரி, 1984 – 25 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- குடத்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- மட்டக்குளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட போல்வின் மேரி தமிழினி அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சத்தியநாதன் மரியடேய்ஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றெமன் கெணற், மேரி இமக்லாற்றா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
போல்வின் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசானா அவர்களின் பாசமிகு தாயாரும்,
மேரி தர்சினி, றொனால்ட் சுமித்திரன்(சுவீடன்), றொனிசியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அல்வின், கிளாடிஸ்(நோர்வே), எட்வின், சிவானந்தம், யமுனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நவீதன், பிரேடன், றிஹாஷன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஜென்ற், ஷோபியா, தனுசாந் அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் பருத்தித்துறை தும்பளை தேவமாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் 27-01-2017 வெள்ளிக்கிழமை பி.ப 4:00 மணியளவில் பருத்தித்துறை கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

