மரண அறிவித்தல்

பொன்னையா நவரட்ணம்
வயது 85, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, சில்வர் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், விளையாட்டு வீரர்
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- அராலி, திருகோணமலை, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, திருகோணமலை, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நவரட்ணம் அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, இரத்தினாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுதாரினி(ஜெர்மனி), சுரேஸ்(கனடா), சுபாஷினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம், நவராஜா, ஞானரஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தராஜா, சிறிகுணநாதன், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சல்பமாலா, மதன்ராஜ், பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு வளர்ப்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சாச்சரம்(இலங்கை), மங்கையற்கரசி(பிரான்ஸ்) மற்றும் கமலராணி(இலங்கை), அகிலேஸ்வரநாதன்(பிரான்ஸ்), வரதலக்சுமி(இலங்கை), கிருஷ்ணதாசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனோஜ்- மிதுஷா, நிவேதா, நிருஜா, நிதர்சன், வினுஷா, பானுஷன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தயாநிதி(ஜெர்மனி) அவர்களின் அன்பு அத்தானும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-12-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

