மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா மயில்வாகனம்
வயது 7224 ஜூன், 1947 – 5 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- தாவடி, இந்தியா, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் சிவக்கொழுந்து(புனிதம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனரூபவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
திருமாறன்(மாறன்- பிரான்ஸ்), லவன்(கனடா), காலஞ்சென்ற மயிலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுயந்தன்(பிரத்தானியா), கஜேந்திரன், சுதேசன்(பிரத்தானியா), இளமதுரன்(பிரத்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குகப்பிரியா(பிரான்ஸ்), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராசா, குகனேசபிள்ளை, நித்தியலட்சுமி, அகிலன், பிரகாஷ்(அமுதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திராதேவி, கைலாசபதி, கலைச்செல்வி, சுபாசினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
குகனேசபிள்ளை இந்திராதேவி தம்பதிகள், காலஞ்சென்ற மனோகரன், லலிதா தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
டக்ஷா, டிஷா, டிஷான்(பிரான்ஸ்), அனுஷ், அஜிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் வேலணை வடக்கு சோளாவத்தையில் 24/JUN/1947 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னையா கண்ணம்மா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.மயில்வாகனம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கலாமணி எனும் அன்பு உடன்பிறப்புடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி அருளானந்தம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அழகிய பெண்ணான தனரூபவதி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக திருமாறன், லவன், மயிலினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து குகப்பிரியா ,ரஜனி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து டக்ஷா, டிஷா, டிஷான், அனுஸ், அஜிஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இந்தியா மற்றும் வவுனியா பண்டாரிக்குளம் போன்றவற்றில் தற்காலிகமாக வாழ்ந்த இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.11.2019 இல் 72 வயதில் தாவடியில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

