மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் இராஜதுரை
ஓய்வுபெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட ஹன்சார்ட் அறிக்கையாளர்
வயது 8814 மே, 1931 – 19 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- சங்கிலியன்தோப்பு
- வாழ்ந்த இடம்
- நல்லூர் வடக்கு , Ottawa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் சங்கிலியன்தோப்பைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கை வதிவிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராஜதுரை அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மதியழகன், மேகநாதன், மதிவதனி, மணிவண்ணன், மேகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயராணி, ரஞ்சனி, சண்முகநாதன், குகாயினி, சாந்திகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் மயில்வாகனம், இராசையா, நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதுரவிஜிதா, சஜீவ், கஸ்தூரி, கார்த்திகா, விஜயாலயன், மீரா, பிரவீணா, ரஷ்மி, பாரதி, விதுரன், சீராளன், கயல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஹரிணி, பாவ்ணா, லவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொன்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான முருகன் ஆலயம் அமைந்துள்ள இடமும் யாழ்ப்பாண கடைசித் தமிழ் அரசனான சங்கிலிய மன்னன் ஆட்சி செய்த நல்லூர் சங்கிலியன்தோப்பில் 14/MAY/1931 இல் பொன்னம்பலம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனாக இராஜதுரை அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மாணிக்கம் மயில்வாகனம், இராசையா, நடராசா எனும் உடன்பிறப்புகளுடன் கூடி நாளொரு மேனியும் பொழுதும் வண்ணமுமாக வளர்ந்து பெரியவனானதும், கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் மகளான இரத்தினேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார். இருவரின் இன்ப வாழ்க்கைப் பொக்கிஷமாக மதியழகன், மேகநாதன், மதிவதனி, மணிவண்ணன், மேகலா எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து விஜயராணி, ரஞ்சனி, சண்முகநாதன், குகாயினி, சாந்திகுமாரன் என்பவர்களை திருமணம் முடித்து வைத்து மதுரவிஜிதா, சஜீவ், கஸ்தூரி, கார்த்திகா, விஜயாலயன், மீரா, பிரவீணா, ரஷ்மி, பாரதி, விதுரன், சீராளன், கயல் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஹரிணி, பாவ்ணா, லவன் எனும் பூட்டப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் பாராளுமன்ற சிரேஷ்ட ஹன்சார்ட் அறிக்கையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.09.2019 இல் 88 வயதில் கனடாவில் உள்ள Ottawa நகரில் இறையடி எய்தினார்.
அன்பு அப்பா அறிவின் சிகரமே
நெஞ்சில் சுமந்து வளர்த்த உறவே
கடவுள் தந்த கருணை உயிரே
கலங்கி அழுகிறோம் கண்ணீர் சிந்தி
உங்கள் நினைவில் உயிர் வாழ்கிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

