மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்மா பொன்னுத்துரை
வயது 8013 ஏப்ரல், 1939 – 27 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- Seattle
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Washington Seattle ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பொன்னுத்துரை அவர்கள் 27-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீபக்சலா, ஸ்ரீசுசீலா, ஸ்ரீநிர்மலா, காலஞ்சென்ற ஸ்ரீசியாமளா, அனுகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி, விசாலாட்சி, இராசலிங்கம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இந்திரானந்தம், யோகேந்திரன், தனஞ்சயன், உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், முத்துலிங்கம் மற்றும் புஸ்பராணி, இலட்சுமணன், காலஞ்சென்ற இராமச்சந்திரன், தம்பிஐயா, காலஞ்சென்றவர்களான கனகம்மா, முத்தையா மற்றும் பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருட்குமரன், ஆந்திரையா, ஆரணி, ஆர்த்தி, தர்சினி, தனுஜன், அனோதயன், தாட்சாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஞ்சேய், சாஸ்சியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயம் உள்ளதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் 13/APR/1939ஆம் ஆண்டில் காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளுக்கு அழகிய குழந்தையாக பொன்னம்மா அவர்கள் இவ் தீவில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் புவனேஸ்வரி, விசாலாட்சி, இராமலிங்கம், தனலட்சுமி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அழகு ஆண் மகனான பொன்னுத்துரை என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து ஸ்ரீபக்சலா, ஸ்ரீசுசீலா, ஸ்ரீநிர்மலா, ஸ்ரீசியாமளா, அனுகலா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது குடும்பத்தில் அக்கறை கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.04.2019 இல் 80 வயதில் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள Washington Seattle நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு அம்மா
......அழகிய உயிரே
நயினா தீவின்
......நல் உள்ளமே
உங்கள் நினைவுடன்
....உயிராய் வாழும்
உற்ற உறவுகளை
.....பிரிந்தது ஏன்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

