ஆறுதல்

நன்றி நவிலல்

பொன்னம்பலம் அருணகிரிநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் அருணகிரிநாதன்

ஓய்வுபெற்ற நில அளவையாளர்

வயது 8528 அக்டோபர், 1933 – 19 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
கொக்குவில் மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

அன்புப் பிள்ளைகளின் பாசக் கவனிப்பிலும் பேரப்பிள்ளைகளின் கண்காணிப்பிலும் மகிழ்ந்து வாழ்ந்து வந்த அருணகிரிநாதன் அவர்களின் வரலாறு தொடர்கிறன...

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் தாவடியில் 28/OCT/1933 இல் பொன்னம்பலம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக அருணகிரிநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் இராசரத்தினம், கணேசரத்தினம், கனகசிங்கம், யோகேஸ்வரி, தங்கராணி எனும் உடன்பிறப்புகளுடன் கூடி நாளொரு மேனியும் பொழுதும் வண்ணமுமாக வளர்ந்து பெரியவனானதும், கந்தையா கனகம்மா தம்பதிகளின் மகளான சிவபாக்கியம் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார். இருவரின் இன்ப வாழ்க்கைப் பொக்கிஷமாக சோதிமலர், அனுசியா, அமுதா, அகிலா, அகிலன், நவீனன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து மோகன்ராஜ், றியோபன, ராஜ்குமார், யோகேஸ்வரன், அனுஜா என்பவர்களை திருமணம் முடித்து வைத்து கிரிசாளினி, றிகன், றிதிகா, அகிபன், கீர்த்திகா, லேனுஜன், ஆர்த்திகா, நிருஜா, பிரியங்கா, ஆரகா, ஆருஷன், அயுரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் நில அளவையாளராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன் புத்தகங்கள் வாசிப்பதையும், தினசரி நாளிதழ்களை படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர்,உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்து வாழ்ந்தார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.09.2019 இல் 85 வயதில் கொக்குவில் மேற்கில் இறையடி எய்தினார்.

தாவடி தந்த தயவான உள்ளமே
காவடி எடுத்து காத்த உறவே
முள்ளடி எடுத்து முதுமையில் வாழ்ந்து
நாவடி தளர்ந்து பிரிந்து சென்றீரே

பிற அறிவித்தல்கள்

  1. 21 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.