ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னம்பலம் கணேசலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் கணேசலிங்கம்

Retired Civil Engineer Highways Agency- United Kingdom

வயது 786 ஏப்ரல், 1941 – 29 ஜூன், 2019

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
Surbiton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணேசலிங்கம் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(முத்தையா) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. உஷா அவர்களின் அன்புத் தந்தையும்,

முரளிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

உத்தமலிங்கம்(கனடா), சோமலிங்கம்(பிரித்தானியா), கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம்(அவுஸ்திரேலியா), யோகலிங்கம்(பிரித்தானியா), ஞானாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறீஜெயநாதன்(கனடா), கமலாசனி(பிரித்தானியா), காலஞ்சென்ற கமலராணி(கனடா), மதனலோசனி(பிரித்தானியா), சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்ற சறோஜினிதேவி(பிரித்தானியா), சோமேஸ்வரானந்தன்(கனடா), திவ்யமலர்(பவானி- அவுஸ்திரேலியா), ரேணுகா(பிரித்தானியா), பரராஜலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலசுந்தரம்(பிரித்தானியா), பாக்கியநாதன்(கனடா), சதானந்தன்(பிரித்தானியா), உமாகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் கிழக்கில் புகழ் பூத்த சீமான் திரு.பொன்னம்பலம் அவர்தம் பாரியார் திருமதி இரத்தினம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 06/APR/1941 ஆம் ஆண்டில் திரு.கணேசலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் உத்தமலிங்கம், சோமலிங்கம், கமலாம்பிகை, சபாலிங்கம், யோகலிங்கம், ஞானாம்பிகை எனும் அன்பு உடன்பிறப்புகளுடனும் தன் தந்தையுடனுன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டார் மேலும் திரு.திருமதி சேனாதிராஜா கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் ஜெயதேவி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக Dr.உஷா என்ற அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து முரளிதரன் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் Retired civil Engineer Highweys Agency ஆக பிரித்தானியாவில் கடமையாற்றியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளை,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 29.06.2019 இல் 78 வயதில் பிரித்தானியாவில் உள்ள Surbiton நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"புன்னகை உறவே
......புது வசந்தமே
அன்பெனும் அலையே
......ஆசை உள்ளமே
இன்மை வாழ்வில்
..... இனிமை உயிரே
மின்னி மறைந்தீர்
.....மீண்டும் மலர்வீர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.