மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் செல்வரத்தினம்
முன்னைநாள் தபால் ஊழியர்-புதுக்குடியிருப்பு
வயது 524 நவம்பர், 1967 – 2 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம், London, Lewisham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை தற்காலிக வதிவிடமாகவும், லண்டன் லூசியம் Catford ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்கள் 02-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம்(சிவகுரு) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலேஸ்வரி(விமலா) அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானன், கேமலதன்(Aerospace Engineer), நிதர்ஷனா(Nurse) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகரத்தினம்(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்றவர்களான பாக்கியம், சந்தானலட்சுமி மற்றும் சபாரத்தினம்(புதுக்குடியிருப்பு), பவளமணி(லண்டன்), அழகரத்தினம்(லண்டன்), மகேந்திர ராசா(லண்டன்), பவானிதேவி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரி(புதுக்குடியிருப்பு), புனிதராசா(புதுக்குடியிருப்பு), லலிதாபத்மினி(புதுக்குடியிருப்பு), மோகனராசா(சந்திரன்- லண்டன்), பாஸ்கரன்(மாவீரர்), வினோதினி(வட்டுவாகல்), கலாநிதி(வவுனியா), தேவி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்றவர்களான மாதவர், அரசரத்தினம் மற்றும் வசந்தி(புதுக்குடியிருப்பு), பாலகிருஷ்ணன்(லண்டன்), காலஞ்சென்ற றஞ்சி, செல்வி(லண்டன்), அமிர்தலிங்கம்(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, சிவசோதி மற்றும் ஜெகதீஸ்வரன்(வட்டுவாகல்), முரளீதரன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
புவனேஸ்வரி(புதுக்குடியிருப்பு), தமிழினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,
குமார், தவப்பிரதா, சாந்தன்(மாவீரர்), கோபு, கவிதா, ஜசிந்தா, தினேஸ், குகன், சுசிகலா, தசிதா, ஜதுர்ஷன், தரின், கோகுலன், கிஷான், நிஷாந்தன், கீதா, கிருஷா, சபேந்தினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ராணி, றேமன், காலஞ்சென்ற அனுசியா, லலிதாராணி(லலிதா), லவன், குமுதா, மேனகா, டஜீவன், சஜீவன், ரூபன், அஜந்தா, பிருந்தன், சபீதன்(மாவீரர்), தர்மிகா, கிருட்சிகா, புகழ்நிலா, திவிசா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பிரகலாதன், தாரணி, தர்ஷன், கீர்த்தனா, பிறணிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய நிலைமை காரணமாக அவரது குடும்பத்தினரோடு மட்டும் நடைபெறும் என்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். நேரடி ஒளிபரப்பு பார்த்து தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்திக் கொள்ளலாம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
முல்லைத்தீவில் கல்வி அறிவு கூடிய பிரதேசமும் இயற்கை வளம் நிறைந்து எங்கும் பசுமையாக காட்சி தரும் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் 04/NOV/1967 இல் திரு.திருமதி பொன்னம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் ஒன்பது முத்துகளில் கடைசி முத்தாக செல்வரத்தினம் அவர்கள் இவ் அவனியில் வந்துதித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கனகரத்தினம்,பாக்கியம், சந்தானலட்சுமி மற்றும் சபாரத்தினம், பவளமணி, அழகரத்தினம், மகேந்திரராசா, பவானிதேவி எனும் சகோதரர்களுடன் பிறந்து கைபிடித்துக் கல்வி கற்று முடித்து தபால் ஊழியராக தொழில் புரிந்து வந்த இவர்,திரு.திருமதி மகாலிங்கம்(சிவகுரு) செல்லம்மா தம்பதிகளின் அன்பும் அழகும் நிறைந்த மகளான விமலேஸ்வரி(விமலா) அவர்களை காதலித்து 1991/01/30 இல் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கஜானன், கேமலதன், நிதர்ஷனா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்ததுடன் 2001 ஆம் ஆண்டில் லண்டனுக்கு தொழில் தேடிச் சென்று 2002 இல் குடும்பத்தையும் அழைத்து பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து உயர்நிலை அடைந்ததும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ராசன் அல்லது செல்வா என அன்பாக அழைக்கப்படும் இவர் பிரசித்தி பெற்ற சமூக,வரலாற்று நாடகக் கலைஞராக விளங்கியதுடன், சிறந்த அறிவிப்பாளராகவும் விளங்கினார். அத்துடன் சொந்தமாகக் கார் எடுத்து வாடகைக்கு ஓடியதுடன், அனைவருக்கும் உதவும் குணமும் அனுசரித்து நடக்கும் சிறந்த பண்பை தன்னகத்தே கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.04.2020 இல் 52 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் லூசியம் Catford நகரத்தில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
ஆனந்த புரத்தின் அற்புத உறவே
தானம் செய்து மகிழ்ந்திட்ட உள்ளமே
ஞானத்தில் சிறந்த ஞாயிறு வதனமே
உதவிடும் வள்ளலே உண்மையின் நண்பனே
பதவிகள் கிடைத்தும் பண்புடன் வாழ்ந்தவரே
நியதி தவறாது நித்தம் வாழ்ந்து
அசதி என்பதை என்றும் விரட்டி
உயரம் தொட்ட ஒப்பற்ற செம்மலே
கயல் கண்ணில் கண்ணீர் சிந்த வைத்துப்
பிரிந்து சென்றீரே வருந்தி அழுகிறோம்...
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

