மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னம்பலம் சிவராசா
வயது 7127 டிசம்பர், 1944 – 6 மே, 2016
- பிறந்த இடம்
- வேலணை புளியங்கூடல்
- வாழ்ந்த இடம்
- விசுவமடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவராசா அவர்கள் 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன்(சுவிஸ்), மலர்விழி(ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி), பொன்விழி(லண்டன்), கயல்விழி(கனடா), சுடர்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீலாம்பிகை, பத்மராசா, உமாராணி, செல்வராணி, காலஞ்சென்ற தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தினி(கொழும்பு), வெங்கடரமணா(யாழ். பல்கலைகழகம்), சத்தியசீலன்(லண்டன்), பாலகுமாரன்(கனடா), நவநீதராசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மனோகரன், லீலாவதி, சந்திரமதி, சிவபாதம், சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருசாந், தரணிகா, துளசிப்பிரியா, சகிஷ்னுராம், கவிஸ்னு, பவிஸ்னு, அஜித்தா, அரிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 74/1,
விசுவமடு பிரதான வீதி,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

