ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொன்னம்பலம் உமாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னம்பலம் உமாதேவி

வயது 7919 நவம்பர், 1940 – 3 மார்ச், 2020

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சயம்புவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் உமாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை

அன்பின் சிகரமாய் அரவணைப்பின்
அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!
வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
நீ இல்லா வெற்றிடத்தை

ஆண்டொன்று கடந்தாலும் அம்மா
உன் இன்முகமும் புன்சிரிப்பும்
எம் மனதை விட்டகலவில்லை அம்மா!

ஆசையாய் நேசமாய் வளர்த்த பிள்ளைகளும்
பாசமாய் பண்புடன் வளர்த்த பேரப்பிள்ளைகளும்
உன்னை இழந்து தவிக்கின்றனர் தினந்தோறும்!

இறைக்கே இணையாகி வானிற்கு நிகராகி
பேரன்பிற்கு இலக்கணமானவளே
மணி மகுடம் அணியா அரசி அம்மா - நீ!
கண்ணீர் மல்க வேண்டுகின்றோம் - மீண்டும் வர

ஒழுக்கத்தால் தீபமேற்றி சூடமாக எரிந்து எமக்கு
ஒளி தந்த தாயே நீ மண்ணுலகை விட்டு
மறைந்தாலும் எங்களின் மனங்களில்
என்றென்றும் வாழ்ந்திடுவீர்கள் தாயே!!

எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டி நின்ற தாயே!
உங்கள் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்!!!

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள் மற்றும் குடும்பத்தினர்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 4 மார்ச், 2020மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 2 ஏப்ரல், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.