மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னர் செல்லத்துரை
வயது 691 ஏப்ரல், 1950 – 25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி தெற்கு
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லத்துரை அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் லட்சுமி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், அச்சுவேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா(சுவிஸ்), கவிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரதீபன்(சுவிஸ்), கரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னம்மா, பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி(கனடா), வேதநாயகம், திசைமலர், நாகரத்தினம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லோகேஸ்வரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(இந்தியா), வரதேஸ்வரன்(கனடா), ஜமுனா, கெங்காதேவி, சுரேஷ்(ஜேர்மனி), தவரஞ்சன், விமலதாஸ், ரஜிதா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. சஜீவன்(இங்கிலாந்து), தயாகரன்(இங்கிலாந்து), சுபாசினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சிறியத் தந்தையும்,
திஷங்க, சேயோன், சேறோன், கிளாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அளவெட்டி தெற்கில் 01/APR/1950 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னர் லட்சுமிதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.செல்லத்துரை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் நாகம்மா, அன்னம்மா, பரமானந்தம் போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் தங்கரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து கவிதா, கவிதரன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பிரதீபன், கரணி என்பவர்களை திருமணம் முடித்து வைத்து திஷங்க, சேயோன், சேறோன், கிளாரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கிளியர் என அன்பு நாமம் கொண்ட இவர் வாழ்வில் கடும் பாடுபட்டு உழைத்த இவர் அன்புள்ளம் கொண்டும் உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.09.2019 இல் 69 வயதில் சுவிஸ்ஸில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
“கண்ணனே கருணை உள்ளமே
அண்ணனே ஆருயிர் வண்ணனே
மண்ணில் ஜனனம் மகத்தாய் மாற்றி
மனதில் அழியா மகத்துவம் பெற்று
மருட்சி மானாய் வாழ்ந்து உயர்ந்து
ஏங்கே போனீர் எமை விட்டு”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

