நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா பத்மநாதன்
வயது 765 ஜனவரி, 1943 – 1 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வேலணை பள்ளம்புலம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Birmingham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட பொன்னையா பத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
வாழ்வில் உழைத்து முன்னேறிய திரு பொன்னையா பத்மநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
யாழ்ப்பாணம் சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலத்தில் 05/JAN/1943 இல் பொன்னையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்புப் புதல்வராக பத்மநாதன் அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.கமலாதேவி, பேரின்பநாயகம், கனகநாயகம் எனும் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தியதுடன், சிறுவயதிலேயே சுயதொழில் செய்யத் தொடங்கினார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளான மீனாம்பிகை அவர்களை 1972ம் ஆண்டு ஆவணி மாதம் 28ம் தேதி திருமணம் முடித்தார். இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக,வதனி, குமணன் ஆகிய பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து,தவரூபன், துஷ்யந்தி ஆகியோர்களைத் திருமணம் முடித்து வைத்து,விருஷா, ஜனந்தன், தருணிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
2010ஆம் ஆண்டுன் பிரித்தானியாவிற்க்கு குடிபெயர்ந்து வாழத்தொடங்கிய இவர், தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்ததுடன், உறவுகள் அனைவரிடமும் பாசமாக பழகுபவராக விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் 01.12.2019 இல் 76 வயதில் பிரித்தானியா Birmingham இல் காலமானார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

