ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னையா சிவராசசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா சிவராசசிங்கம்

ஓய்வுபெற்ற இ.போ.ச ஊழியர்

வயது 646 நவம்பர், 1954 – 15 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
எழுதுமட்டுவாள் வடக்கு
வாழ்ந்த இடம்
மீசாலை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். எழுதுமட்டுவாள் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சிவராசசிங்கம் அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னராசா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தன், சாரங்கன்(அவுஸ்திரேலியா), பிந்துசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகவதி, சிவயோகநாதன்(கனடா), சிவானந்தன்(கனடா), சிவநேசன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இளையநாதன், யசோதராதேவி(கனடா), சந்தானலக்சுமி(கனடா), யாழ்மொழி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பானுஜா, கோவர்தனன், வேணுகானன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, அஞ்சனா, பிரவீன், பிரவீனா, பிரசோன், சேயோன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்கள், தெங்குத்தோட்டம், மிளகாய்தோட்டம், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு எழுதுமட்டுவாள் வடக்கில் 06-11-1954 இல் பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சிவராசசிங்கம் அவர்கள் திலகவதி, சிவயோகநாதன், சிவானந்தன், சிவநேசன் ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

மேலும் அன்பும் ஆளுமையும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் சின்னராசா, ராசம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான பிரேமாவதி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து அஜந்தன், சாரங்கன், பிந்துசா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவர், இவர் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியராக திகழ்ந்தார். அதாவது சாரதியாக யாழ்ப்பாணம் கொடிகாமம் ஊடாக செல்லும் பேரூந்தில் இவரின் சேவையை அனைவரும் புகழ்வர். அவ்வாறு சிறந்த சேவை ஆற்றி ஓய்வு நிலை அடைந்தார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் புற்றுநோய் தாக்கி 15-04-2019 இல் 64 வயதில் மீசாலை மேற்கில் உள்ள தனது வீட்டில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"கடமை மனமே
கலங்கா உள்ளமே
காவல் தெய்வமே
கருனை வீரனே
எங்கள் தந்தையே
எங்கள் உயிரே
உங்கள் நினைவில்
உள்ளம் வெதும்புது "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.