மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னு யோகம்மா
வயது 8015 நவம்பர், 1938 – 3 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கு பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னு யோகம்மா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன், லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தி தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காஞ்சென்ற பொன்னு அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னையா, ரத்தினம், செல்லம்மா, கனகம்மா, அன்னம்மா, ஐயாத்துரை, பராசக்தி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவராசா, சுலோசனா, சிறிஸ்கந்தராசா, சிவானந்தன், ஐவராசா, ஜெயராசா ஆகியோரின் அன்பு தாயாரும்,
திசைவீரசிங்கம், றஜனி, இன்பரானி, ரஜனி, பமிலா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வாணி ஜெயராஜா, உமா ஜெயதாஸ், கோமதி ஞானசேகரன், றூபா பிரதீபன், ரஜீதன் அனித்தா, சுரேன், பிரவீனா, நிதீபன், சந்தோஷ், துர்க்கா, இலக்கியா, நிலவன், சாறுயன், தர்வின், அயான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திசான், வினுசன், ஜெந்துசன், மயூரன், ஹரிஷ், சியாமா, ஜெஷ்வின், அனாமிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் மேற்கில் 15/NOV/1938 இல் திரு.திருமதி வேலன் லக்சுமி தம்பதிகளின் அன்பு மகள் யோகம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சின்னையா, ரத்தினம், செல்லம்மா, கனகம்மா, அன்னம்மா, ஐயாத்துரை, பராசக்தி, புவனேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி வைத்தி தெய்வானை தம்பதிகளின் மகனான திரு.பொன்னு எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சிவராசா, சுலோசனா, சிறிஸ்கந்தராசா, சிவானந்தன், ஐவராசா, ஜெயராசா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து திசைவீரசிங்கம், றஜனி, இன்பராணி, ரஜனி, பமிலா, சங்கீதா என்பவரை திருமணம் முடித்து வைத்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
தனது வம்ச வளர்ச்சிகளான வாணி ஜெயராஜா, உமா ஜெயதாஸ், கோமதி ஞானசேகரன், றூபா பிரதீபன், ரஜீதன் அனித்தா, சுரேன், பிரவீனா, நிதீபன், சந்தோஷ், துர்க்கா, இலக்கியா, நிலவன், சாறுயன், தர்வின், அயான் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், திசான், வினுசன், ஜெந்துசன், மயூரன், ஹரிஷ், சியாமா, ஜெஷ்வின், அனாமிக்கா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 03.11.2019 இல் 80 வயதில் கோண்டாவில் மேற்கில் இயற்கை மரணம் அடைந்தார்.
அன்பு அன்னையே அகிலம் போற்ற வளர்த்தீரே
கண்ணின் மணி போல்காத்த உறவே
விண்ணில் நட்சத்திரமாக
ஒளிரும் நிலவாக எங்கும் பார்ப்பீர்
எமது அன்னை உள்ளமே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

