1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொன்னுச்சாமி காங்கேயநாதன்
வயது 77, JP, ஓய்வுபெற்ற மின் பொறியியலாளர், முன்னாள் வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினர்
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கலைநகர் சித்தன்கேணி குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னுச்சாமி காங்கேயநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே அகத்தின் ஒளிவிளக்கே அப்பா
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம் அப்பா!
அம்மாவின் மறைவுக்குப் பின்பு நாங்கள்
கண்ணீர் வழிய நின்ற வேளையில்
எங்களுக்கு நீங்கள் ஆறுதலாக நின்றீர்கள் அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ அப்பா!
எம்மை ஒரு நிமிடம் காணாவிட்டாலும்
துடித்து பதை பதைத்த நினைவுகள்
இன்னும் கண்ணீர் விழியை நனைக்கின்றது அப்பா!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது அப்பா!
உங்கள் நினைவுகளுடன் அன்புத் தம்பிமார்கள்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
உங்கள் ஆத்மா சாந்திபெற முருகனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் 1ம் ஆண்டு சிரார்த்த திதி கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையிலும், பிரான்ஸிலும் நடைபெறும்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

