ஆறுதல்

மரண அறிவித்தல்

பொன்னுத்துரை புஸ்பராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னுத்துரை புஸ்பராசா

வயது 5510 அக்டோபர், 1963 – 19 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
மாங்குளம்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு மாங்குளம் வன்னிவிழாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புஸ்பராசா அவர்கள் 19-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பொன்னுத்துரை சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை, காலஞ்சென்ற சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

பாரணன், கெவின், சரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராசா, பரம்சோதி, மாலினிதேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைராசா, இராசம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தேவகி, தேவசீலன், தேவரஞ்சன், தவரூபன், தவநிதி, தவநேசன், தர்சன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

பாஸ்கரன், ஸ்ரீதரன், சுபாஸ்கரன், முரளிதரன், கிருபாகரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

முல்லைத்தீவில் அழகிய இடமும், காடுகள் நிறைந்து காணப்படுவதுடன், கால்நடை வளர்ப்பு, தேன் சேகரித்தல், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த மாங்குளத்தில் உள்ள வன்னிவிழாங்குளத்தில் 10-10-1963 இல் பொன்னுத்துரை சுந்தரி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் புஸ்பராசா அவர்கள் சிவராசா, பரம்சோதி, மாலினிதேவி, சியாமளாதேவி ஆகிய உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

மேலும் சிவசோதி என அன்பாக அழைக்கப்படுவதுடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் ஐயம்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அழகுப் பெண்ணான சிவநந்தினி அவர்களை திருமணம் முடித்து வைத்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து பாரணன், கெவின், சரணி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார். இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கியதுடன்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19-04-2019 இல் 55 வயதில் ஜேர்மனியில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"அழகிய வதனம்
.....அன்பு உள்ளம்
கருமை மீசையே
.....கரு விழி
இரண்டேபுன் முறுகல்
....புகழ் சிங்கம்
உன் மேனி மறைந்து
....உருகிக் கண்ணீர் வடிக்கிறது "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.