நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பூபாலசுந்தரம் சிவதாசன்
வயது 4515 மார்ச், 1973 – 7 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- Hayes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூபாலசுந்தரம் சிவதாசன் அவர்களின் அந்தியேட்டி நாள் நினைவஞ்சலி.
பூபாலசுந்தரம் இராசபத்மநாயகி தம்பதிகளின் மூன்றாவது மகனாய் சிவதாசன் (சூட்டி) எனும் திறமை வீரர் அவதரித்தார் தரணியில்.
அப்பா பேரூந்து சாரதியாக இராஜவீதியில் வாகனம் செலுத்தாத இடமுமில்லை. இங்கே சூட்டியின் கால் படாத இடமுமில்லை. படிப்பிலும், விளையாட்டிலும் தீராத ஈர்ப்பு சூட்டிக்கு. அம்மாவின் ஆசை பிள்ளையான சூட்டி ஆடாத விளையாட்டு திடலில்லை ஈழத்தினில்.
களம் பல கண்டு சூட்டி ஆண்டவன் துணை கொண்டு அடுக்கடுக்காய் பல வெற்றி கொண்டு காண்பவர்களை வியக்கும் வண்ணம் ஊர் போற்ற வாழ்ந்து வந்தார்.
உன்னையிட்டு எத்தனை எதிர்பார்ப்புகளுடன் இருத்தாள் அன்னையவள். நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர் தேசத்திலும் உன் திறனையும், ஈகையையும் பாராட்டாதோர் இல்லை. நட்புக்காக வாழ்ந்த சூட்டி சேர்த்தது என்னவோ நட்பையும் நல்லுள்ளங்களையும் மட்டும் தான்.
வீரதீரனுக்கு வீரமே வினையானது. கண் இமைக்கும் வேளையில் காலனவன் கவர்ந்து கொண்டான் இறுதி அஞ்சலிக்கு அன்னையின் வருகைக்காக உடன்பிறப்புக்களும் அன்னையும் படாதபாடு பட்டனர். எல்லா அலுவல்களும் முடிந்த நிலையில் வருகைக்கான அனுமதி(விசா) மறுக்கப்பட்டது. அன்னையில்லாது சூட்டியின் உடலை அனல் கொண்டது. அனல் தின்ற மிச்சத்தை சகோதரர்கள் பத்திரமாய் எடுத்து வைத்தனர். அன்னையின் ஆசைக்காய் அவளது கரம் கொண்டு உற்றார், உறவினர்களுடன் இணைந்து ஈழத்தின் புண்னிய பூமியாம் கீரிமலை தீர்த்தக்கரையில் 25-10-2018 வியாழக்கிழமை அன்று மிஞ்சிய அவரது அஸ்தியை ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கரைக்கின்றோம்...!
மேலும் சூட்டியெனும் நல்லானின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக எல்லாம் வல்ல அருள்மிகு போதிராம்பிட்டி(போதி) பிள்ளையாரை பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!!!
வீட்டு முகவரி:
இராஜவீதி தோப்பு,
அச்சுவேலி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

