ஆறுதல்

மரண அறிவித்தல்

பிரேமாகுமாரி தர்மராஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிரேமாகுமாரி தர்மராஜன்

வயது 565 நவம்பர், 1962 – 24 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Hattingen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை கண்ணகைபுரம் பூம்புகாரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரேமாகுமாரி தர்மராஜன் அவர்கள் 24-04-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமநாதன், பூம்பாவை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமலிங்கம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மராஜா(Hattingen) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மிளா, நிவேதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சூரியகுமாரி, சந்திரகுமார், நந்தகுமார், சாந்தகுமார், மணிவண்ணன்(ஜேர்மனி), சதீஸ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஜீத்(Stuttgart) அவர்களின் பாசமிகு மாமியாரும்,

பாக்கியநாதன்- நீலாம்பிகை(KP Jewellers) அவர்களின் பெறாமகளும்,

தனபாலசிங்கம்(ஜேர்மனி), சுவேந்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரூபன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய், வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரம் கண்ணகைபுரம் பூம்புகாரில் 05-11-1962 இல் சோமநாதன் பூம்பாவை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக பிரேமாகுமாரி அழகிய குழந்தையாக அவதரித்தார். அன்பும் பண்பும் நிறைந்த இவர் சூரியகுமாரி, சந்திரகுமார், நந்தகுமார், சாந்தகுமார், மணிவண்ணன், சதீஸ்குமார் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ராமலிங்கம் பார்வதி தம்பதிகளின் அழகு மகனான தர்மராஜா என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து தர்மிளா, நிவேதா எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார். இவ்வாறு கணவன் பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 24.04.2019 இல் 56 வயதில் ஜேர்மனியில் உள்ள Hattingen நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

முழுக் கதையையும் வாசிக்க

""புங்குடுதீவின்
.....புது விளக்கே
பூவையர் உலகில்
......புது மலரே
பூமுகம் காண
....புலரும் காலை
போனது எங்கே
....காணல் உயிரே.""

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.