31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
புலேந்திரன் நேசமலர்
வயது 6121 ஜனவரி, 1948 – 25 செப்டம்பர், 2009
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசமரபாகு பளவத்தை வல்வெட்டிதுறையைச் சேர்ந்த புலேந்திரன் நேசமலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்து பெற்றவளே
பாதி வழியில் எமை விட்டு போனாயோ !
ஆறாத் துயரில் நாம் விளங்க
மீளாத் துயில் கொண்டு போனாயோ !
பாலூட்டி வளத்த அம்மாவே !
பாலூற்றி கிரியை செய்ய பாவியானோமே !
ஏன் இந்த நிலை எமக்கு தாயே !
இன்னுயிரை விட்டு எங்கு நீ சென்றாய்
கன்றுக்குட்டி கூட தாய்ப்பசுவை நோக்குது பார்
இன்று நாமும் உன்முகத்தை நோக்காது போனோமே
விதி செய்த விளையாட்டா இது - அல்ல
வீணர்களின் சதி செய்த மாயமா இது
அள்ளி எடுத்து அணைத்த அன்னையின் கைகளை விடுத்து
துள்ளி வந்து துயரை யார் துடைத்தாலும் ஏற்க முடியவில்லையே-அம்மா!
கண்ணை மூடித் திறந்திடும் போதெல்லாம்
விண்ணை நாடிச் சென்ற உன் விம்பம்தான் தெரியும் அம்மா!
ஓடி வருவாய் என் தாயே
தேடி நிற்போம் உன்னை நிதமும்.
பாலூட்டி வளர்த்த எங்கள்தாயே
பாவியரானோம் நாம் இன்று
தீராத நோய் வந்ததனால்
சோகமது குடிகொண்டதுவோ
சின்னதுரை சின்னதுரை என்று உன் கணவரும்
அம்மா அம்மா என்று உன் பிள்ளைகளும்
மாமி மாமி என்று உன் மருமக்களும்
அம்மம்மா அம்மம்மா என்று உன் பேரப்பிள்ளைகளும்
அக்கா அக்கா என்று உன் சகோதரனும் (ஆறுமுகநாதன்)
அருகில் இருந்தும் பார்க்கமுடியாத உன் தங்கையும் (சிவயோகம்)
தூரத்தேசத்தில் இருந்து உன் அக்காவும் (கிளி)
நல்லம்மா நல்லம்மா என்று உன் பெறாமக்களும்
கதறுகின்றனர் வந்திடுவாய் என்று வடிக்கின்றோம் கண்ணீர்
அன்னை போல் அணைத்திடுவாள்
ஆறுதல் தந்த எங்கள் நல்லம்மாவின் நா இன்று நிசப்தமாது ஏன்?
அன்னமிட்ட அவள் கை இன்று அசைய மறுப்பது ஏன்?
ஆசையாக நல்லம்மா என்றால் சொல்லம்மா என்ற வார்த்தை எங்கே?
தேடுகின்றோம் அவள் உயிரை தேசம் எல்லாம்.
அவள் உரு உருக்குலைந்து போனது ஏன்?
ஆறுதல் தர ஓடிவா நல்லம்மா
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

