மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை
வயது 8930 ஏப்ரல், 1930 – 4 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி பொன்னுத்துரை அவர்கள் 04-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருணாச்சலம் பூபாலு அவர்களின் அன்பு வளர்ப்பு மகனும்,
செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தநாயகி, மனோகரராசா(லண்டன்), மகேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சிறீதரன்(கொட்வின்), பாலபாஸ்கரன், பாலேந்திரன்(லண்டன்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), அருந்தவநாயகி(லண்டன்), காலஞ்சென்ற புவனேந்திரன், குலேந்திரன்(லண்டன்), இராசநாயகி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பொன்னம்பலம், செந்தில்வடிவு, விஜயலதா(ஜேர்மனி), நாகரஞ்சி, ஜீவராணி(லண்டன்), காலஞ்சென்ற சோமேஸ்வரி ரேவதி(பிரான்ஸ்), கிருபாமூர்த்தி(லண்டன்), பிறேமிளா(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுமார், சசிக்குமார், செல்வக்குமார், சுதர்சினி, சர்மிளா, ஊர்மிளா, மேகலா, கார்த்திகா, பவிந்திரன், கீர்த்தனன், மதுசன், விருட்சாயினி, சுஸ்விந், பிரவிந், காலஞ்சென்ற கபில்நாத், சோபிகன், பிரசாந்தி, மோகிலன், சகிர்தா, பிரமிதா, மதுக்ஷா, லதுக்ஷன், கவிக்ஷா, லக்சிகா, யுதுர்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2019 புதன்கிழமை அன்று சிலாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சிலாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த முல்லையும் நெய்தலும் இணைந்த வனப்பு மிகு இடமும் வீரமும் பண்பும் கொண்ட மக்களைக் உடைய முல்லைத்தீவு சிலாவத்தையில் 30/APR/1930 ஆம் ஆண்டில் திரு.திருமதி புண்ணியமூர்த்தி பார்வதி தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.பொன்னுத்துரை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் அருணாச்சலம் பூபாலு தம்பதிகளின் வளர்ப்பில் பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன்,திரு.திருமதி சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அழகிய பெண்ணான செல்வநாயகி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக வசந்தநாயகி,மனோகரராசா, மகேந்திரன், சிறீதரன், பாலபாஸ்கரன், பாலேந்திரன், ரவிச்சந்திரன், அருந்தவநாயகி, புவனேந்திரன், குலேந்திரன், இராசநாயகி எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து பொன்னம்பலம், செந்தில்வடிவு, விஜயலதா, நாகரஞ்சி, ஜீவராணி, சோமேஸ்வரி ரேவதி, கிருபாமூர்த்தி, பிறேமிளா, சிவகுமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சிவகுமார், சசிக்குமார், செல்வக்குமார், சுதர்சினி, சர்மிளா, ஊர்மிளா, மேகலா, கார்த்திகா, பவிந்திரன், கீர்த்தனன், மதுசன், விருட்சாயினி, சுஸ்விந், பிரவிந், கபில்நாத், சோபிகன், பிரசாந்தி, மோகிலன், சகிர்தா, பிரமிதா, மதுக்ஷா, லதுக்ஷன், கவிக்ஷா, லக்சிகா, யுதுர்சிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் ஒரு அண்ணாவியராக சிறந்த கூத்துப் படைப்புகளை ஆற்றுகைப் படுத்தி மக்களை மகிழ்வித்ததுடன் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.11.2019 இல் 89 வயதில் முல்லைத்தீவில் உள்ள சிலாவத்தையில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
சிறந்த கலைஞனே சிந்து நடைக் கூத்தின் மன்னனே
பரந்த பாசத்தை பார் எங்கும் பரவவிட்ட அன்பனே
வீரம் நிறைந்த விரல் சுட்டி கூறும் நபர்களில்
பாரம் தாங்கி பாதை காட்டிய செம்மலே
தூரம் போனீரே தூக்கி வளர்த்த எமை விட்டு
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

