நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புண்ணியமூர்த்தி தெய்வேந்திரன்
ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர், சாவகச்சேரி
வயது 6029 டிசம்பர், 1958 – 14 மே, 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு இறைபதம் அடைந்த வேளையில் ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் அவரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் எமக்கு உதவி புரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அரியாலை முதலியார் வீதியில் 29/DEC/1958 இல் புண்ணியமூர்த்தி இரத்தினம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக தெய்வேந்திரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் கனகரெட்ணம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகள் சத்தியகலா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ரூபநிஷாந்தினி, காயத்திரி, பிரஷாத், நளினிகாந், சத்தியேந்திரன் ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன் இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் சாவகச்சேரி மின்சாரசபை ஊழியராக கடமையாற்றி ஓய்வு நிலை அடைந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.05.2019 இல் 60 வயதில் நல்லூர் செம்மணி வீதியில் உள்ள வீட்டில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அரியாலை மண்ணின்
......அற்புத மனிதரே
அஞ்சாத உறவே
.......துஞ்சாத உள்ளமே
அனைவர் மனதையும்
.....புரிந்த உறவே
உங்களின் நினைவில்
.......எங்களின் மனங்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

