மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பராணி பாலகிருஷ்ணன்
22 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி பாலகிருஷ்ணன் அவர்கள் 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்- மானிப்பாய் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மினி(சுவிஸ்), கஜமுகன்(கனடா), வசந்தன்(வசந்தன் கூல்பார்), கோகுலன்(லண்டன்), தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானமணி, சந்திரபவானி, யோகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரவியநாயகம்(இந்திரன்- சுவிஸ்), செல்வமலர்(கனடா), தாரணி, அகல்யா(லண்டன்), ஜெயந்திரன்(அலுவலக உதவியாளர்- வலயக்கல்வி அலுவலகம் வலிகாமம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம்(சாவகச்சேரி), சிவராஜசிங்கம், சத்தியநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரவீன், வருண், தாரகன், வத்சலாயன், வானுசன், அனுஜன், கபிஷன், தனுஷன், கிஷாந், கிஷோபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2015 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மானிப்பாய் வீதி,
உரும்பிராய் மேற்கு,
உரும்பிராய்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

