நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புஸ்பவதி இரத்தினசிங்கம்
வயது 777 நவம்பர், 1941 – 1 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு உடன் வந்து உதவிகள் செய்தவர்களுக்கும், நேரில் வந்தும் மற்றும் தொலைபேசி, முகப்புத்தகம் மூலம் ஆறுதல் கூறிய அன்புள்ளங்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு பலவழிகளில் உதவிபுரிந்தவர்களுக்கும், மலர் வளையம் அனுப்பியவர்களுக்கும் அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
ங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசை யாழ். காங்கேசன்துறையில் 07/NOV/1941 இல் திரு.திருமதி.பேரம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் புஸ்பவதி அவர்கள் சண்முகசாமி, சிவசாமி, பரமேஸ்வரி, இராமநாதன், அருள்ஞானசோதி போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தம்பிப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகன் திரு.இரத்தினசிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சுரேஸ்குமார், சுரேந்தினி, சுதர்சினி, சுகந்தினி, சுபாசினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பங்கயச்செல்வி, கிஷேந்திரா, ஜெயராஜா, சிவறஞ்சன், சஞ்சீவ்குமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சபீனா, விதுசன், மதுப்பிரியா, நிவேதா, சகானா, அபித்தா, ஹரீஷ், விதுஷா, துஷ்யந்தி, பபிஷன், அவினாஷ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும் ஆர்யான் எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதில் அலாதி விரும் உடைய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை, உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்01.08.2019 இல் 77 வயதில் காங்கேசன்துறையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
காங்கேசன்துறை தந்த
கருணை உறவே
வாழ்வாங்கு வாழ்ந்த
வசந்த உள்ளமே
நேர்மைக் குணம்
நிறைந்த உயிரே
பாசம் தந்து
பிரிந்து சென்றீரே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

