ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேஸ்வரி தர்மலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேஸ்வரி தர்மலிங்கம்

வயது 8214 அக்டோபர், 1936 – 22 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கோண்டாவில், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று கோண்டாவிலில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, அன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சறோமலாதேவி, கமலராணி, யோகராசா, கலாவதி, சிவராசா, கோமதி, ஜெயகலா, தவராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கச்சியம்மா, சின்னக்கிளி, பூபாலசிங்கம், ராமசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருச்செல்வம், புஸ்பநாதன், சாந்தினி, காலஞ்சென்ற குலேந்திரன், சிவாஜினி, செல்வநேசன், சிறிமோகன், நிரஞ்சலா ஆகியோரின் அருமை மாமியாரும்,

சுரேசன்- சர்மினா, ரமேஸ்- பிரசாந்தி, கஜேன், சாந்தமோகன்- பிரமினா, நிரோசன்- கெளசல்யா, கபிலன்- தனுசா, பார்த்தீபன், அனுசன், ஜசிந்தன், நிருஜா, மிதுனா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கீர்த்திகா, பிரகலாதவன், ஆகீசன், திவ்யா, ஹினிசியா, அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபிராம், சுஜீனா, ஹரிஸ், சரணி, மகிஷா, ஆருசி, முகாசினி, ஆதவி, அபிமன்யு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று ந.ப. 12:00 மணியளவில் நவரட்ணராஜா வீதியுள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 01:00 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ். வட்டுக்கோட்டை வடக்கு சித்தன்கேணியில் 03-01-1946 இல் கணபதிப்பிள்ளை செட்டிச்சியார் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக இராசமலர் அழகிய குழந்தையாக அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் காசிப்பிள்ளை, கந்தசாமி, கதிரவேற்பிள்ளை, பாக்கியலட்சுமி, தங்கமலர், தவயோகமலர் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஆறுமுகம் இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அழகு மகனான வைரமுத்து என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கலையரசி, கருணாகரன், கலைச்செல்வி, கலையமுதா, கருணாநிதி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார். இவ்வாறு கணவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22-04-2019 இல் 73 வயதில் வவுனியாவில் உக்குளாங்குளம் எனும் இடத்திலுள்ள வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

""எங்கள் சொந்தமே
.....எங்கள் உயிரே
நிலையில்லா உலகில்
......நிலைத்தாய் மனதில்
தங்க மனமே
....தாய் உள்ளமே
சொந்த பந்தங்களை
....பிரிந்து சென்றதேன்."

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.