1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராகவன் ஜீவாகரன்
வயது 2020 ஆகஸ்ட், 1996 – 15 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- Stavanger
- வாழ்ந்த இடம்
- Trondheim
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநோர்வே Stavanger ஐ பிறப்பிடமாகவும், Trondheim ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ராகவன் ஜீவாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுநாள்.
எம் இதயத்தில் நீங்கா இடம்
பெற்றவனே, எம் ஜீவனே!
உன் வாழ்வை எமக்கு
வழிகாட்டியாக அமைத்தவனே
எம் உயிரே எம் உயிருக்கும்
உயிரானவனே எம்மவனே!
அறிவு ஜீவியே அற்புத ஒளிவிளக்கே
எம் அருமைச் செல்வனே!
உன் அம்மா தவம் இருந்து பெற்ற
ஆசை மகனே எம் ராசா!
உன் தந்தைக்கு பல கலையும்
கற்பித்த ஆசானே செல்லமே
உன் சகோதரிகளின்
அன்புக்கும் பாசத்திற்கும்
ஈடு இணையற்றவனே
எமக்கு கிடைத்த அரிய வெகுமதி
நீயடா எம் அருமைச் செல்வமே!
அன்பே மேன்மையென வாழ்ந்த
அன்பின் திருவுருவம் ராகவா!
பலர் போற்ற நீ வாழ்ந்து
பல கலையும் கற்ற உத்தமனே
வாழும் காலம்வரை வாழ்வை
உணர்ந்தவன், நேசித்தவன்
என்றும் எம் நினைவோடும்
உணர்வோடும் கலந்திருப்பாய்!
நாம் தினமும் உச்சரிக்கும்
திருநாமம் ராகவன்
எம் ஆன்மாவோடு கலந்து
என்றும் வாழ்வில் நிலைத்திருப்பாய்
நாம் வாழும் இடமெல்லாம்
உன் நினைவுகளே நிறைந்ததய்யா
உன் ஆன்மா சாந்திடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
என்றும் உன் நினைவுகளோடு வாழும்
அப்பா, அம்மா, பெரியக்கா, சின்னக்கா
மைத்துனன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

