ஆறுதல்

மரண அறிவித்தல்

இரகுநாதன் பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரகுநாதன் பரமேஸ்வரி

வயது 8331 டிசம்பர், 1936 – 27 ஜூன், 2020

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி கிழானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட இரகுநாதன் பரமேஸ்வரி அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரகுநாதன்(முன்னாள் கணக்காளர்- Mackwoods) அவர்களின் அன்பு மனைவியும்,

நிரஞ்சனன்(லண்டன்), ஜனார்தனன்(அவுஸ்திரேலியா), மயூரதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவராணி, நிருபா, ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம், காலஞ்சென்ற ஈஸ்வரி, தாமோதரம்பிள்ளை, இராமகிருஷ்ணன், மீனாம்பாள், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், தசரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தனபாக்கியவதி, காலஞ்சென்றவர்களான குணபாக்கியவதி, புஷ்பவநாதன், பாலசுப்ரமணியம் மற்றும் சிவராஜராஜேஸ்வரி, சிவகுமாரன்(நிற்சிங்கம்), சுலோசனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாசுகி அஜந்தன், ரேணுகா வசிகரன், காலஞ்சென்ற அனுரதி சசிதரன், ரதிக்கா அரவிந்தன், சசிகரன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

காலஞ்சென்ற பாலகுமார், சகுந்தலா, சந்திரா பத்தலோமஸ், நளாயினி ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

ராகுல், கிஷான், அபினேஷ், அஸ்வினா, மகிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 10.30 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12.30 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.