நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை கைலாயதுரை
வயது 611 செப்டம்பர், 1958 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ், Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
கைலாஸ் என்று அன்போடு அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த ஒரு உன்னத ஆத்மா.யாழ்ப்பாணத்தில் 01/SEP/1958 இல் இராசதுரை மங்கயற்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வராக கைலாயதுரை அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
தங்கத்துரை, பவளத்துரை, பவளராணி, தங்கராணி, இராஜராணி, தேவராணி, அருமைத்துரை ஆகிய சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் துரைராசா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளான, சாந்தினி என்பவரைத் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக,ஆர்த்தி, ஆருணி, ஆருயன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணிபோல பாதுகாத்து வளர்த்தார்.
இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.மேலும் அன்பும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 61 வயதில் கனடாவில் இறையடி எய்தினார்.
”அருள் உருவே அறிக் கடலே
எளிமை மனமே எங்கள் உறவே
தந்தை உயிரே தங்கப் பொக்கிஷமே
பந்தம் காத்த பாச உள்ளமே
எங்கே சென்றீர் எமை விட்டு
தங்கப் பேழையில் மௌனம் ஏனோ”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

