நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜா இராஜேந்திரராஜா
பத்திரிகையாளர்
வயது 893 ஜூன், 1930 – 24 மே, 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட இராஜா இராஜேந்திரராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
திரு. இராஜா இராஜேந்திரராஜா (மானிப்பாய், நல்லூர்) அவர்கள் யாழ்ப்பாணம் சிறீலங்கா அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றியவர். கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் யாழ்ப்பாண குறூப் செய்தியாளராகவும், யாழ். மாவட்ட சிறப்பு விளையாட்டுச் செய்தியாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண விளையாட்டுச் செய்தியாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். முதலாவது தமிழ் விளையாட்டுத்துறை சஞ்சிகையான நோதேர்ன் ஸ்போர்ட்சின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியதோடு, வடமாகாணத்தில் முதன்முதலாக மென்பந்துக் கிரிக்கட் போட்டியை ஏற்பாடு செய்து நடத்தியவர்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

