ஆறுதல்

நன்றி நவிலல்

பிறப்பு7 அக்டோபர், 1945
இறப்பு2 ஏப்ரல், 2022
இராஜகுமாரி ஆனந்தப்பா அவர்களின் படம்

இராஜகுமாரி ஆனந்தப்பா

வயது 76

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி, கொழும்பு, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகுமாரி ஆனந்தப்பா
அவர்களின் நன்றி நவிலல்.

எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!

விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்துஎம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
ஆலமரமாய் நீங்கள் எங்களைஅரவணைத்தீர்கள்
விழுதுகளாய் நாம் இருந்தோம் அம்மா!

நாட்கள் 31 கடந்தாலும்
உங்களின் உள்ளத்து நினைவலைகள்
இன்னும் ஓயவில்லை அம்மா!

ஆசைகள் காட்டியா எங்களைவளர்த்தீர்கள் அம்மா
இல்லையே பாசத்தையே காட்டியெல்லோ
எங்களைவளர்த்தீர்கள் அம்மா!

இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே எமக்கு தாயாக வேண்டும் அம்மா

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.