நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜலட்சுமி இராசேஸ்வரன்
வயது 8128 நவம்பர், 1937 – 25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
எப்போதும் இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்த இராஜலட்சுமி அவர்கள் வாழ்க்கை வரலாறிது...
இயற்கை எழில் மிகுந்த இடமும் தமிழர் பண்பாடு போற்றப்படும் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 28/NOV/1937 இல் பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மனம் கொண்ட மகளாய் பிறந்த இராஜலட்சுமி அவர்கள் சரஸ்வதி, கண்ணகையம்மா, கனகம்மா எனும் சகோதரங்களுடன் ஓடி ஆடி குறும்புகள் செய்து வளர்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இவர் ஆங்கிலத்தில் அதிக புலமை பெற்றவர். அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனான இராசேஸ்வரன் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மோகனா, பாலமுருகன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து, நற்போதனகளை போதித்து வளர்த்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணைகளாக ஜெகநாதன், ரஞ்சிதமலர் போன்றோரை திருமணம் முடித்து வைத்த இவர் 1995 காலகட்டங்களில் குடும்பத்தோடு கனடாவிற்கு குடிபெயர்ந்து வசிக்கத் தொடங்கினார்.
முன்கோபம்-பின்னிரக்கம் எனும் குந்த்தை பெற்ற இவர் அனைவரோடும் பாசமாக பழகி ஜனனி, மோகனன், சபேசன், கபிலன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், உதவி செய்யும் குணத்தை இயற்ககையாகவே பெற்ற இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.09.2019 இல் 81 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் மரணம் அடைந்தார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

