ஆறுதல்

மரண அறிவித்தல்

இராஜலெட்சுமி வாமதேவன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜலெட்சுமி வாமதேவன்

வயது 855 ஜூலை, 1934 – 7 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்
Stouffville

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலெட்சுமி வாமதேவன் அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சொர்ணம்மா(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வாமதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,

மேகலை(கனடா), சத்தியதேவன்(பிரான்ஸ்), இராசுதேவன்(இலங்கை), காலஞ்சென்ற மகாதேவன், கோசலை(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன்(கனடா), நந்தினி(பிரான்ஸ்), ரேனுகா(இலங்கை), ரகு(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவஞானம், அருணகிரிநாதன், கேதாரநாதன், காலஞ்சென்ற சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவன், பானுஜா, ஹர்ஷன், அபிரா, லக்‌ஷன், சாகீஷன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த அல்லைப்பிட்டியில் 05/Jul/1934 இல் திரு.திருமதி தர்மலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அருமை மகளாய் இராஜலெட்சுமி அவர்கள் சிவஞானம்,அருணகிரிநாதன்,கேதாரநாதன்,சந்திராதேவி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் உரும்பிராய் திரு.திருமதி சோமசுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனான வாமதேவன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மேகலை, சத்தியதேவன், இராசுதேவன், மகாதேவன், கோசலை போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகேந்திரன், நந்தினி, ரேனுகா, ரகு போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து பவன், பாணுஜா, ஹர்ஷன், அபிரா, லக்ஷன், சாகீஷன், ஆதவன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் சத்தி Teacher என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்07.08.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கண்ணாடி அழகே கால விளக்கே
முன்னாடி வந்து முயற்சித்த உறவே
என்னாலும் கல்வியை இனிமையாக வழங்கி
கண்ணாய் உயர்ந்த கடவுள் உள்ளமே
மண்ணாய் போனீரே மனங்களை வென்றீரே

பிற அறிவித்தல்கள்

  1. 6 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.