மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரட்ணம் ஞானமணி
வயது 7718 ஜூலை, 1941 – 11 மே, 2019
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரிய நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் ஆலடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஞானமணி அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தொம்பை விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகளும், சக்தியேகு சவரி செயம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரத்தினம்(முன்னாள் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெசித்தா பிரியதர்சினி(ஆசிரியை- வவுனியா தமிழ் மத்திய.ம.வி ஆரம்ப பிரிவு), அனுலா(ஜேர்மனி), மஞ்சு(சுவிஸ்), வாமதேவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியநாயகம் கொடுத்தோர்(உப அதிபர், வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), ரெஜி(ஜேர்மனி), சார்ள்ஸ்(சுவிஸ்), மேரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செபமாலை, அன்னக்கிளி, யோகம்மா, சந்தாம்பிள்ளை மற்றும் அழகம்மா(கனடா), ராணி, நேசம்மா, லூத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜொனாத்தன்(HSBC வங்கி உதவி முகாமையாளர்), டிவ்வியசாரா(மகாவலி தேசிய கல்வியற் கல்லூரி மாணவி), டிலாணி, பஸ்லிக்கா, டனிஸ், தக்சன், அனா, ஜக்ஸ்டன், ஈத்தன், விவியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்ததும்,வரலாற்று சிறப்பு வாய்ந்த இடமாகவும் படித்த மக்களை அதிகம் கொண்டதும்,கற்பகதரு(பனை) நிறைந்து காணப்படும் இடமும் தெங்கு தோட்டம்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த மன்னாரில் 18/Jul/1941 ஆம் ஆண்டில் தொம்பை விக்ரோறியா தம்பதிகளுக்கு அன்பு மகளாக ஞானமணி அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் செபமாலை, அன்னக்கிளி, யோகம்மா, சந்தாம்பிள்ளை, அழகம்மா, ராணி, நேசம்மா, லூத்தம்மா போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சக்தியேகு சவரி செயம்மா தம்பதிகளின் அழகிய ஆண் மகனான இராசரத்தினம்(அதிபர்) என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து ஜெசித்தா பிரியதர்சினி(ஆசிரியை), அனுலா, மஞ்சு, வாமதேவன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது குடும்பத்தில் அன்பு கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.05.2019 இல் 77 வயதில் தோணிக்கல் ஆலடி வீதியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மன்னார் தந்த
......மான்பு உள்ளமே
மாசற்ற சோதி
......மங்காத ஒளியே
புன்னகை முகமே
....பூந் தென்றலே
அழுது கண்ணீர் சிந்த
......ஆண்டவனிடம் சென்றீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

