ஆறுதல்

நன்றி நவிலல்

இராஜரட்ணம் நடராஜசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜரட்ணம் நடராஜசுந்தரம்

Old student of Hartley College, Point Pedro and former employee of Ceylon Tobacco Corporation.

வயது 6723 நவம்பர், 1951 – 12 ஜூன், 2019

பிறந்த இடம்
புலோலி கிழக்கு
வாழ்ந்த இடம்
Wimbledon

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு"

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள்,தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும் ,உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த புலோலி கிழக்கில் புகழ் பூத்த சீமான் திரு.நாகநாதன் இராஜரட்ணம் அவர்தம் பாரியார் திருமதி இராசம்மா இராஜரட்ணம் அவர்களின் அருமைப் புத்திரனாக 23/NOV/1951 ஆம் ஆண்டில் திரு.நடராஜசுந்தரம் அவர்கள் இவ் அழகிய பூமியில் தவமணிதேவி பூபாலசிங்கம், மல்லிகாதேவி பொன்னுத்துரை, லக்சுமிதேவி மனோகரன், சரஸ்வதிதேவி பத்மநாதன் போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து தொழிலில் ஈடுபட்டதுடன், புலோலி தெற்கு உபயகதிர்காமத்தைச் சேர்ந்த திரு.திருமதி தர்மலிங்கம் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளான சாரதாதேவியை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக கார்த்திகேயன், வள்ளி போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்களின் விருப்பத்தின் காரணமாக லக்சுமி என்பவரைத் திருமணம் முடித்து வைத்து ஹரிஸ் என்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் Old student of hartley college,point pedro and former employee of ceylon tobacco corporation இல் வேலை செய்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 12.06.2019 இல் 67 வயதில் பிரித்தானியாவில் உள்ள Wimbledon நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

”புன்னகை முகமே
புன் சிரிப்பே
இன்மொழிப் பேச்சே
இளமை உருவே
இரக்க மனமே எங்கள்
இளம் தென்றலே
இங்கே எமைத் தவிக்கவிட்டு
எங்கே போனீர்”

பிற அறிவித்தல்கள்

  1. 13 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.