நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் சத்தியலஷ்மி
வயது 8121 செப்டம்பர், 1937 – 11 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— தீபன்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் அத்தியடியில் 21/SEP/1937 இல் திரு.திருமதி ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமை மகளாய் சத்தியலஷ்மி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி செல்லையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகன் இராஜரட்ணம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக காந்தினி, திபாந்தினி, அனுஷா, தனுஷா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து கனகலிங்கம், சர்மில், சுரேஸ்குமார், தீபன் என்பவரை திருமணம் முடித்து வைத்து டர்சினி, பாலவசந்தன், அஸ்வினி, சசிலன், நிதர்சினி, துசானா, வினித், கஜிபன், வசீக்கா, அபினா எனும் பேரப்பிள்ளைகளுடனும், விநாயக், விகாந், றிக்சித், அக்ஷரா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வவுனியாவில் தற்காலிகமாக வாழ்ந்த இவர் . எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11.08.2019 இல் 81 வயதில் பிரான்ஸில் உள்ள Paris நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
உயிரில் கலந்த உன்னத ஆத்மா
உலகில் சிறந்த உணர்வுள்ள உயிர்
உள்ளம் நிறைந்த நினைவின் தடம்
தரணி போற்ற தயவுடன் வாழ்ந்து
ஏணிப் படிபோல் எமை ஏற்றி
பிரிந்து சென்றீர் எங்கும் நிறைந்து
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

