மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜரட்ணம் சீனியப்பா
புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலையத்தின் முன்னாள் அதிபர்
வயது 896 ஏப்ரல், 1930 – 25 மே, 2019
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சீனியப்பா அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி மருதலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரிமளகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகி, ஞானகலா, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செல்வரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,
அருள்பிரகாசம், ஸ்ரீகுமார், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, பூமணி ஆகியோரின் மைத்துனரும்,
கஜனி சிந்துஜன், ஜனனி, அபிராமி கோபிகிருஷ்ணன், பிரசாந்த்தி, காயத்ரி, அர்ஜுனன், பிரணீதா, லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சத்யன், ஏகன், ஆர்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புன்னாலைக்கட்டுவனில் 06/APR/1930 ஆம் ஆண்டில் சீனியப்பா சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக இராஜரட்ணம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நவரத்தினம், செல்வரத்தினம் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் அமிர்தவல்லி மருதலிங்கம் தம்பதிகளின் அன்பு மகள் பரிமளகாந்தி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து தேவகி, ஞானகலா, ராதாகிருஷ்ணன் போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன் அருள்பிரகாசம், ஸ்ரீகுமார், மஞ்சுளாதேவி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் பேரப்பிள்ளைகளுடனும் பூட்டப்பிள்ளைகளுடனும் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கை புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலயத்தில் அதிபர் சேவை செய்து ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.05.2019 இல் 89 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
புன்னாலை தந்த
......புகழ் அரசனே
புது வசந்தமே
.......புதுப்பாதை காட்டிய
உயர்ந்த செம்மலே
........கருணை மனமே
கலங்கி அழுகிறோம்
......தினம் தினம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

