2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜதுரை ராஜகுலசிங்கம்
வயது 4927 மே, 1966 – 12 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜதுரை ராஜகுலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு அவதாரமாய் பாசத்திற்கு பற்றுள்ளவராக
புன்னகை பூத்த சிரிப்புடனும் பண்புள்ளம் கொண்ட
அபூர்வ குணத்தோடும் பணிவான அறிவுரையும் கனிவான
பேச்சும் பாசத்தை பலமாக பொக்கிசமாக அள்ளித்தந்து
நிரந்தரமாக எம் வாழ்வில் நீங்காத இடம் பிடித்த அன்பின்
ஆதாரமாக வாழ்ந்த எம் வீட்டு ஒளிவிளக்கு எம்மை விட்டு
பிரிந்து ஈராண்டுகள் ஆனபோதும் எம் ஈரவிழி
இன்னமும் காயவில்லை அவர் நினைவுகளுடன்
நாளும் நாமும் ஊர்வலமாய் நகர்கின்றோம்
ஒரு பூகம்பம் வந்து சென்ற தடமும் எம்
புன்னகையை நிறுத்தி விட்ட மெளனமும்
காலம் கடந்தும் நெருப்பாக சுடுகிறது
உரைந்த பனித்துளியாய் உருகுது
தினமும் அவரின் ஞாபகச் சுவடுகள்
அவரின் வயதை மட்டும்தான் ஆயுளால் கட்டுப்படுத்த முடிந்தது
நாம் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலையானது
என்றும் உயிரானது ஆயுளால்
அளக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது
வசந்தகாலத்தில் அவர் விட்டுச் சென்ற தடயங்கள்
எம் வாழ்வின் உயர்ந்த பொன்னான ஏணிப்படிகள்
அழகான அற்புதமான தருணங்கள்
எம் உயிர் உள்ளவரை அவரின் அன்பு
ஆன்மா பாசத்தின் முன் நின்று எமை வழிநடத்தும்
அன்பே திருவுருவே அளப்பெரும்
ஜோதி ஆனவரே பல்கோடி
வெண்மீன்களாய் ஒளிவீசும் சுடர் விளக்கே
உங்கள் அன்பு ஆன்மா ஆத்மாத்தமாக
சிவசாந்தியடைய வேண்டும் உறவுகள்
நாம் கூடி கண்ணீர் பூக்களால் சரம் தொடுத்து உங்கள்
பாதங்களுக்கு பன்னீர் பூக்களை சமர்ப்பிக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

