மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜேந்திரன் ரபீந்திரன்
வயது 6123 மே, 1957 – 18 மே, 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- இத்தாலி, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேந்திரன் ரபீந்திரன் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன், பாலாமணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற இராயப்பு, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவிகா(இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுனா, மிதோஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன்தாஸ்(அவுஸ்திரேலியா), ரமேஷ்(இந்தியா), மதுபாலா, ஷைலா, ரோஷன், காலஞ்சென்ற முரளி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரெகானா, ராஜேஷ், பிரேம்குமார், லலிதா, குமாரி ஆகியோரின் அன்பு மச்சானும்,
ராணி ஸ்ரிபன்(யாழ்ப்பாணம்), அஞ்சலா மெய்யநாதன்(Hatton), சாந்தி கண்ணன்(கனடா), பீலிக்ஸ் கெங்கா(இத்தாலி), அம்புறோஸ் தயா(சுவிஸ்), பிபியா துரைச்செல்வம்(கொழும்பு), அன்ரன் சமிளா(பிரான்ஸ்), லொறற்றா சிக்கோ(இத்தாலி), காமலீற்றா பாப்பி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-05-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய இடமும்,தலைநகரமும்,வர்த்தக நிலையங்கள்,துறைமுகம் என அழகு நிறைந்த கொழும்பில் ராஜேந்திரன் பாலாமணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக ரவீந்திரன் அவர்கள் 23/May/1957 இல் அழகு நிறைந்த இவ் நகரில் மோகன்தாஸ், ரமேஷ், மதுபாலா, ஷைலா, ரோஷன், முரளி போன்ற உடன்பிறப்புகளுடன் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் இராயப்பு அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் தேவிகா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து மிதுனா, மிதோஷன் ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இத்தாலியில் பலகாலம் வாழ்ந்ததுடன் கடினப்பட்டு உழைத்ததுடன், எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி,பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.05.2019 இல் 61 வயதில் கொழும்பு நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கருணை முகமே
......கடவுள் உள்ளமே
அன்பாக வாழ்ந்த
.......அஞ்சாத உறவே
ஆசை உயிரே
.......அமைதி வடிவே
அழகாய் வாழ்ந்து
.......அகிலம் துறந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

